Sing-Ind Voice

Breaking News

[w8_row margin_bottom=”30px”]
[w8_column type=”col-md-6″]« Cambodia -Mr Pon Mahalingam, News Editor[/w8_column][w8_column type=”col-md-6″][/w8_column][/w8_row]

A Celebration for the Chola King Rajendra Cholan in Singapore -October 11th, 2014

“கடாரங்கொண்டான்” இராசேந்திரன் அரியணையேறிய 1000ஆவது ஆண்டுவிழா

தற்போது சிங்கப்பூர் குடிமகனான நான் பிறந்து வளர்ந்த சத்திரம் என்னும் கிராமம் கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோவிலிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. எங்கள் கிராமத்திலிருந்து பார்த்தாலே பெரிய கோவிலின் உச்சி கண்ணுக்குத் தெரியும்.

அவ்வளவு உயர்ந்த, கம்பீரமான கோபுரத்தைக் காணும்போதெல்லாம் மனதிலே ஒரு பெருமை. அதைக்கட்டிய மன்னன் இராசேந்திர சோழன் வடக்கே கங்கை(வங்கம்) வரையும் கிழக்கே கடாரம் (மலாயா) வரையும் வென்று தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் நிலைநாட்டி இந்திய அரசர்களில் எவரும் எட்டாத உயரத்தை எட்டினான் என்று எண்ணும்போது, அதுவும் கங்கைகொண்டசோழபுரம் அப்பேரரசின் தலைநகராக 250 ஆண்டுகளுக்குமேல் திகழ்ந்த்து என்று எண்ணும்போது மனதிற்குள் ஒரு சிலிர்ப்பு.

உள்ளம் பெரிய கோவிலைப்போல் நிமிர்ந்து நிற்கும். நெஞ்சை நிமிர்த்தி மீசையை முறுக்கி விடத்தோன்றும்.

அப்படிப்பட்ட அரசன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன, அவனுக்கு கங்கைகொண்டசோழபுரத்தில் விழா எடுக்கிறார்கள் என்று அறிந்தபோது மகிழ்ச்சி. அந்த விழாவில் இசையாஞ்சலி செலுத்த எனது மகள் பூங்குழலியும் மகன் விமலபுகழனும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றபோது எனது மனம் கட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தது. இராசேந்திரனினது மெய்க்கீர்த்தி சிங்கப்பூரிலுள்ள இசையாரியர் திரு தி இரா விஜயகுமார் அவர்களைக்கொண்டு இசையமைக்கப்பட்ட்து. இராசேந்திரனது மெய்க்கீர்த்தியும், கருவூர்த்தேவரின் திருவிசைப்பாவும் எங்களது வீட்டில் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒலித்துக்கொண்டிருந்தன, இசையாஞ்சலிக்கான பயிற்சிக்காக.

இதனிடையே, சிங்கையில் இந்த விழா எடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதை, கவிமாலையின் திரு மா அன்பழகன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டு உதவி கேட்டேன். அவரும், தாமும் கவிமாலையும் விழா நடப்பதற்கான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார்.

எங்களது குடும்பத்தில் அனவரும் கங்கைகொண்டசோழபுரம் விழாவிற்குச் சென்றோம். முதல்நாள் கருத்தரங்கம், இசையாஞ்சலி, நாட்டியாஞ்சலி ஆகியவை இனிதே நடந்தேறின. இரண்டாம் நாள் விழா அவனது பிறந்தநாளான ஆடி ஆதிரையில். காலையில். தஞ்சையிலிருந்து தீபத்தொடரோட்டம் தொடங்கியது. அதே நேரத்தில் கங்கைகொண்ட சோழேச்சரத்தில், அவனது பிறந்த நாள் மகா யாகம் நடந்தது. யாக சங்கல்பத்தை நானும் என்னுடைய துணைவியும் ஏற்று நட்த்திய போது, இராசேந்திரனுக்காக அவனது பிறந்தநாள் யாகத்தை ஏற்ற உணர்வு. கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பெருவுடையாரே என்னை அங்கே வரச்செய்து இந்நிகழ்வில் இடம் பெறச்செய்ததாக அப்போது உணர்ந்தேன்.

நாம் வாழும் சிங்கை இராசேந்திர சோழன் வென்ற கடாரத்தின் (மலாயாவின்) ஒருபகுதியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்க, சிங்கையிலும் மலேசியாவிலும் இவ்விழாவைக் கொண்டாடுவது அவசியம் என்று எண்ணினேன். அன்று மதியமே விழா ஏற்பாட்டாளர் திரு கோமகனிடம் பேசினேன். இரவு திரு பாலகுமாரன் வந்திருந்த போது அவரிடமும் இதை நானும் திரு கோமகன் அவர்களும் சொன்னோம். திரு பாலகுமாரன் அவர்கள் ஒரு வினாடி கூட யோசிக்காமல் இராசேந்திர சோழனுக்காக நான் வருகிறேன் என்று ஒப்புதல் அளித்தார். விழாவும் சிறப்பாக நடந்தேறியது. கங்கைகொண்ட சோழபுரம் விழாவுக்காக சிங்கையிலுள்ள அன்பர்களும் நிதியுதவி வழங்கினார்கள் என்பதையும் இங்கே குறிப்பிடல் அவசியம்.

நான் சிங்கை வந்தவுடன், திரு அன்பழகனிடம் ஆலோசித்தேன். திரு பாலகுமாரனை அவரது வரலாறுப் படைப்புகளுக்காக பெருமைப் படுத்துவது முக்கியம் என்பதை முடிவு செய்தோம். திரு அன்பழகன் அவர்கள் சிங்கப்பூரில் பல நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவம் உடையவர். தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு குறவாகவே இருக்கிறது. அதுவும் இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. வரலாற்றைப்பற்றி பேசும்போது நகைச்சுவை இருக்காது. கங்கைகொண்டசோழபுர விழாவில் பேசிய அனைவருமே வரலாற்றாளர்கள், எழுத்தாளர்கள். பேச்சாளர்கள் கிடையாது. அப்படி இருக்க, மக்களை வரவழைக்க வேறு யாரேனும் முகியப் பேச்சாளராக அழைக்கலாம் என்று எண்ணி ஒரு புகழ்பெற்ற பேச்சாளரை அணுகினோம். ஆனால், அவருக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதால் வர இயலவில்லை.

இந்த சூழ்நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் பேசிய பேச்சாளர்களில் இன்னும் இருவரை அல்லது மூவரை அழைக்கலாம் என்று முடிவு செய்து, திரு தனவேல் IAS (Rtd), முனைவர் இராசேந்திரன், முனைவர் குடவாயில் பாலசுப்ரமனியன் ஆகியோரை திரு கோமகன் மூலம் அணுகினோம். அனைவருமே இராசேந்திர சோழன் விழா என்பதால், உடனே ஒப்புதல் அளித்தனர். இதில் முனைவர் குடவாயில் பால்சுப்ரமனியன் அவர்கள் வேறு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றை வேறு நாளுக்கு மாற்றி வைத்து இன்னிகழ்ச்சிக்கு வருகையளிக்க இசைந்தார். முன் சொன்னது போல எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களும் விழாவுக்கு வருகையளிக்க தன்னுடைய உடல்நிலயும் பொருட்படுத்தாது ஒப்புதல் அளித்தார். முனைவர் இராசேந்திரன் அரசு அனுமதி கிடைக்காததால் வர இயலவில்லை.

நான் சார்ந்த கங்கைகொண்டான் கழகமும் கவிமாலையும் இணந்து இவ்விழாவினை செப் 28 மாலை 6மணிக்கு நட்த்துவதாக மாதாந்திர கவிமாலை நிகழ்ச்சியிலும், திரு தியாக ரமேஷின் மூலம் மற்ற தமிழ் அமைப்புக்களுக்கும் அறிவிப்பு செய்தாகிவிட்ட்து. சிங்கப்பூர் தமிழ் அமைப்புக்கள், ஊடகங்கள், மற்றும் தலைவர்களுடனான தொடர்புகளை திரு அன்பழகன் திறம்பட கையாண்டார். கங்கைகொண்டான் கழகத்துக்கு, நிதிதிரட்டும் பணியும் பொதுமக்களிடையே விழாவைக் கொண்டுசெல்லும் பணி.

இவ்விழாவுக்கு பெருமளவியல் மக்கள் வரவேண்டுமென்றால், சோழநாட்டுப் பகுதியிலிருந்து வந்து சிங்கையில் வசிக்கும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதை மனதளவில் உறுதி செய்துகொண்டேன். இராசேந்திர சோழனையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் உணர்வோடு பார்ப்பவர்கள் நிச்சயம் விழாவுக்கு வருவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்த்து. அதற்கு நவீன ஊடகங்களான முகநூலும் மின்னஞ்சலும் மிகவும் உதவிகரமாக இருந்தன. இந்த முயற்சியில் எனக்கு பெரும் வெற்றி. மத்திய கிழக்கு நாட்டிலிருந்துகூட (Qatar) நம் விழாவிற்கு வந்திருந்தனர் என்பது இதற்குச் சான்று.

இதெ சமயத்தில், திரு அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்த போது, திரு அருண்மகிழ்நன் அவர்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பைப் பற்றியும் அவர் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பற்றி பாரட்டியதாகவும் கூறினார். மேலும் “நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை” என்ற ஆரஐச்சிக் கட்டுரை நூலை தொகுத்த ஜோர்டானுக்கான சிங்கப்பூர் தூதர் திரு கேசவபாணி அவர்களையும் அழைக்கவேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகக் கூறினார். அதன் பிறகு திரு கேசவபாணி அவர்களும் நிகழ்ச்சிக்கு வர இசைந்தார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க இணங்கிய பேராசிரியர் திண்னப்பன், திரு அருண்மகிழ்நன் ஆகியோர் திரு அன்பழகனுடன் அடைக்கடித் தொடர்புகொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பற்றி அறிந்து கேட்டறிந்தும் தக்க ஆலோசனைகளை வழங்கியது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

விழாவின் ஆரம்பத்தில் கடவுள் வாழத்துடன் இராசேந்திரனின் மெய்க்கீர்த்தியை இசையுடன் நடனமாகப் படைக்க எண்ணினோம். ஆனால், நேரம் கருதி மெய்க்கீர்த்தியை மட்டும் இசையும் நடனமுமாகப் படைக்க முடிவு செய்தோம். இசை கொடுப்பதற்கு கங்கைகொண்ட சோழபுரந்த்தில் இசையாஞ்சலி செலுத்திய பூங்குழலியும் விமலபுகழனும் தயாராக இருந்தனர். அதே சமயத்தில், அங்கே நடனாஞ்சலி செலுத்திய செல்வி வர்ஷினி, திரு கோமகன் அவர்களின் தங்கை மகள், விழாவிற்கு சிங்கைக்கு வர ஆசைப்படுவதாக அறிந்து அவரையே நடனமாடக் கேட்டோம். அவரது பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இராசேந்திரன் மெய்க்கீர்த்தி சற்று கடினமான நடையிலிருந்த்தால் அனைவருக்கும் புரியும் வண்ணம் தமிழ்த்தம்பி ந.வீ.சதிதியமூர்த்தி எழுதிய இராசேந்திரன் வாழ்த்து பாடப்பட்டது.

அங்கே விழா எடுத்த திரு கோமகன் அவர்களையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றி சிறிது விளக்கத்துடன், திரு குணவதிமைந்தன் அவர்களின் ஆவணப்பட்த்தின் முன்னோட்டத்தையும் திரையிடுமாறு கேட்டோம். அவரும் ஒப்புதல் அளித்தார். நிகழ்ச்சியின் இறுதி வடிவம் தென்பட்டது. இது கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டு நாட்கள் நடந்த பெரு விழாவின் மூன்று மணிநேர வடிவமாகவே பட்டது.

இதனிடையே, நானும் திரு அன்பழகனும் சேர்ந்து விழா அழைப்பிதழை வடிவமைத்தோம். அழைப்பிதழ் நான்கு பக்கங்களைக் கொண்ட்தாக இருந்தது. அழைப்பிதழ் அளவுக்கு விழாவும் அழகாகவும் பெரிதாகவும் பேராதரவுடன் சிறக்க வேண்டும் என்பதுவும் எங்களுக்கு மேலும் உந்துதல் தந்தது. சிஙகையில் நடக்கும் ஒவ்வொரு தமிழ் நிகழ்ச்சிக்கும் சென்று விழா மலை விநயோகம் செயதோம். இதில் கவிமாலை நண்பர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது.

எதிர்பார்த்ததை விட அதிக பங்கேற்பு இருக்கும் என்று விழாவுக்கு இரண்டுநாள் முன்னர் ஒரு உணர்வு. எனக்குத் தெரிந்தவர்களெல்லாம், இச்செய்தியை அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லாமலில்லை. அரியலூர், சிதம்பரம், கும்பகோணம் வட்டாரத்திலிருந்து சிங்கையில் வாழும் நண்பர்கள் ஒவ்வொருவரும் இது தங்கள் விழாவாக எடுதுக்கொண்டு, அவர்களால் முடிந்தவரை வட்டார மக்களை ஒன்றிணைத்து விழாவுக்கு வலு சேர்த்தனர்.

அதேநேரத்தில், விழாவுக்கான செலவுகளுக்கும் நெருக்கடி கூடியது. எனக்கு இருபது வருடங்களாக பழக்கமான திரு இராகோபால்(Kinds Family) அவர்கள் பொருளுதவி அளிப்பதாகச் சொன்னார். எனது நண்பர்களும் தங்களால் முடிந்ததைக் கொடுத்தனர். மேலும் ஓரிருவர் தாமாக முன்வந்து உதவி செய்வதாக உறுதியளித்தனர். சில நிறுவனங்ளை அணுகினேன். நாளைக்கு அழையுங்கள் திங்கட் கிழமை அழையுங்கள் என்றனர். எனக்கு விழா நல்லமுறையில் நடந்தேற வேண்டும் என்பது அதிக நேரம் செலுத்த முடிவு செய்தோம். பொருள் இரண்டாம் பட்சமாகப் பட்டது.

இதுபோல் விழாவைக் கண்டதில்லை என்று சொல்லுமளவிற்கு மக்கள் ஆதரவு. ஆறு மணிக்கே உட்கார இடமில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் நிற்கவும் இடமில்லை. வழியிலும், மேடையிலும் இருந்த இடமனைத்திலும் மக்களை அமரச்செய்தும் பலர் திரும்பச் செல்ல நேரிட்டது. விழாவன்று ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு துளியும் தொய்வில்லாமல் சென்றது என்றே அனைவரும் கூறினர். விழாவுக்கு வந்திருந்த அனைவரும் தமிழர் வரலாற்றின் உன்னதங்ளைக்கேட்டு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச்சென்று சோழர்களிக் வெற்றிகளில் சிலநேரம் திளைத்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் தமிழரின் இன்றைய நிலையை எண்ணி வருத்தப் படாமலிருக்கவும் முடியாது.

அதே போல் வசந்தம் தொலைக்காட்சியின் ஒத்தழைப்பு மிகவும் பாராட்டத் தக்கது. வசந்தம் செய்தி விழாவுக்கு முன்னரும் பின்னரும் மிகவும் சிறப்பாக செய்திக் கொத்துகளைத் தந்தனர், தாளம் குழுவும் நிகழ்ச்சியின் கடைசிரை இருந்து பேச்சாளர்களிடம் பேட்டிகண்டனர்.

விழாவின் முடிவில் இராசேந்திரன் அரியணையேறிய 1000ஆவது ஆண்டுவிழா ஒரு வெற்றி விழாவாக முடிந்த்து. விழாவுக்கு வந்திருந்த பலர் வரலாற்று போதையில் சென்றனர். பலரை விடிய விடிய தூங்க விடாமல் செய்துவிட்டது. இவையெல்லாம் நான் நேரடியாக்க் கண்டதும் கேட்டதும்தான். பேராசிரியர் திண்ணப்பன் பிறகு கூறியது போல் “அற்புத வரலாறு இதனின் மற்றுண்டோ?”. இதனை தமிழர் அனைவரும் அறிவது அவசியம். மாணவர்களுக்குக் கொண்டுசெல்வது அதைவிட அவசியம். வருங்கால சந்ததி இதை அறிய வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில், விழா நன்றியுரையில் இவ்விழாவுக்கு உதவிய அனைவருக்கும் பெயர் சொல்லி நன்றி கூற முடியவில்லை. இத்தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன். இதிலும் விடுபட்டவர்கள் தவற்றினை மன்னிக்கவும். முதலில் திரு மா அன்பழகனுக்கு மீண்டும் நன்றி சொல்லியாக வேண்டும். மேலும் திரு ந வீ சத்திய மூர்த்தி, ந வீ விஜயபாரதி, நண்பர்கள் தியாக ரமேஷ், ராஜா ஜெயராமன், ஆன்ந்த் மித்ரா, ரமேஷ், பாலா, செல்வம், வைத்தி, மதிகுமார், இளங்கோ, Kinds Family, அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், அனைவருக்கும் கங்கைகொண்டான் கழகம் சார்பாக எனது நன்றிகள். எனக்கு வழிகாட்டிகளாக இருக்கும் ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
ப. புருஷோத்தமன்.

Leave a Reply