Sing-Ind Voice

Breaking News

Capture2

சிங்கப்பூரில் இருந்து கொண்டு தமிழகத திரையுலகிற்குப பல படங்களை வெற்றிகரமாகத் தயாரிக்கும் ஒருவர் நம்மிடையே இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அவர் இப்போது சிங்கப்பூரை மையமாக்கி ஒரு முழு நீள தமிழ் படத்தைத் தயாரிக்கிறார் என்பதையும் சேர்த்து இப்போது நம்புங்கள். ஆம். அருமைச சந்திரன் தான் அவர். இதுவரை மூன்று படங்களை உருவாக்கிய இவரின் அடுத்த தயாரிப்பின் படப் பிடிப்பு கடந்த மூன்று வாரங்களாக சிங்கப்பூரின் பல இடங்களிலும் நடந்து வருகிறது.

நாசரின் மகன் பாஷா கதா நாயகனாக நடிக்கும் இந்த ‘ப்ரொடஷன் 1’ல் நடிப்பதற்கென்றே இங்கு வந்திருக்கும் நாயக நடிகை ஐஸ்வர்யா,, கருணாகரன், சதீஷ், பாலாஜி,மற்ற பல முன்னணி நட்சத்திரங்கள் , அலுக்காமல் சலிக்காமல் நம் சிங்கப்பூர் அழகையும், உணவையும் ருசித்து சாப்பிட்டு, நகரின் பல பகுதிகளிலும் பவனி வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை நடிக்க வைத்து வேலை வாங்குபவர் டைரக்டர் தனபால் பத்மநாபன். ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ என்ற படத்தை கவிதை வடிவில் எடுத்த அதே தனபாலன் தான்.

“என்னோடு ‘சைவம்’ படத்தில் என் பேரனாக நடித்தவன் பாஷா. நாயகனாக நடிக்கும் வாய்ப்பை இப்போது அவன் பெற்ரிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிங்கப்பூரின் சூழலில் இதைப் படமாக்கும் அருமைச் சந்திரனைப் பாராட்டுகிறேன்” என்று , இப்படத்தின் ஆரம்ப பூஜைக்கு வந்திருந்த குணசித்திர நடிகர் நாசர் என்னிடம் சொன்னார். நடிகர் நாசர் ,தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.

“அப்பாவின் ஆசியுடன் என் கதா நாயக நடிப்புத் துவங்குவதில் நான் பெருமையடைகிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கநம்மிடம் சொன்னவர் நாயக நடிகன் பாஷா. கலகலப்பாகவும், உற்சாகத்தோடும் காணப்பட்டார். அப்பாவின் களை அப்படியே இருக்கிறது. இளந்தாடியுடன், வாலிபக் களை சொட்ட நின்ற பாஷா, இந்தப் படத்தில் தான் ஏற்கவிருக்கும் சவாலான பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘நான் என் முழு முயற்சியையும் கொடுத்து ரசிகப் பெருமக்களின் நல்லாதரவைப் பெறுவேன்’ என்று நம்பிக்கையோடு கூறிய அவர், சிங்கப்பூரும், அதன் மக்களும் எனக்குப் பிடித்தவை என்றார்.

சிங்கப்பூரின் புகழ் மிக்க டீவி நடிகர் மதியழகன், குணா முதலியோரும் நடித்து வரும் இப்படத்தின் பல பாடல்கள் , எம்.ஆர்..டி. நிலையங்களிலும், விமான நிலையத்திலும் படமாக்கப் பட்டுள்ளன. இரவு பகல் பாராமல் பட யூனிட்டுடன் நகர் வலம் வரும் இப்படத்தின் இயக்குனர் தனபாலன் சிங்கப்பூர் அழகு நிலைகள் எதையும் விட்டுவைக்கவில்லை.

ஜோஷுவா ஸ்ரீதர் இதன் இசையமைப்பாளர். நம் சிங்கப்பூர்தயரிப்பாளர் அருமைச் சந்திரனைப் பாராட்டுவோம். –ஏ.பி.ராமன்.

Leave a Reply