Sing-Ind Voice

Breaking News

Mr Arul Oswin

Digital Story telling Project with Primary School student

மின்னிலக்க காணொளிகள் வழியாக  மாணவர்களின் திறனை சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு ‘இளமை’ தன்னார்வ குழு செயல்பட்டு வருகிறது.

இக்குழு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இம்முயற்சியை ஆரம்பித்துவிட்டது. புத்தாக்கச் சிந்தனையுடன் இணைய வானொலி நிலையம் ஒன்றை தொடர்ந்து சில ஆண்டுகளாக நடத்தி வந்தது. மேடை நிகழ்ச்சிகள், நிகழ்ச்சி நெறியாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள் மற்றும் வாய்மொழி பயிற்சிக்கான கல்வி வளங்கள் தயாரித்தல் போன்ற முயற்சிகளிலும் முனைப்போடு செயல்பட்டு வந்தது.

சில வருட இடைவேளைக்குப் பிறகு அக்குழு இப்பொழுது புதுப் பொலிவுடன் ‘இளமை 2.0’ என்று மறுமளர்ச்சி கண்டுள்ளது. முன்னால் உறுப்பினர்கள் சிலர் விடைப்பெற்றாலும், புதிய உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் இக்குழு இயங்கவுள்ளது.

இந்த முறை, மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் பயன்தரும் வகையில் மின்னிலக்க காணொளிகளை அவர்களைக்கொண்டே தயாரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஷிஃபா மற்றும் பலஸ்டியார் தொடக்கநிலை பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்ட மின்னிலக்க கதை சொல்லும் திட்டம் அதில் அடங்கும். சுமார் 30 தொடக்கநிலை மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் தங்கள் தமிழ் பேச்சாற்றலையும் நடிப்பு திறனையும் மேன்படுத்திக்கொண்டனர். அவர்கள் நாடக பானியில் கதை கூறிய கானொளிகள் ‘ilamai’ என்ற முகலூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஊடக ஆதரவாளர்களான தமிழ் முரசு நாளிதலின் புதிய இணையத்தள பக்கத்திலும் இக்காணொலிகள் இடம்பெறும்.

அடுத்த கட்டமாக குறைந்த வருமான குடும்பத்தை சேர்ந்த இளையர்களின் திறமையை வளர்த்து அதை வெளிக்கொனர ‘நண்பன்டா’ என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளது ‘இளமை’ குழு. ‘பியான்ட் ஸ்சோஷியல் செர்வீஸ்’ சமூக அமைப்புடன் இணைந்து 15-20 இளையர்களுடன் அக்குழு செயல்பட உள்ளது.

சமூக அக்கறையும் மின்னிலக்க கானொளிகளை தயாரிப்பதில் ஆர்வம் உள்ளவர்களும் ‘இளமை’ குழுவினருடன் இணைந்து செயல்பட ‘ilamai’ முகநூல் பக்கம் அல்ல ilamaiteam@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 

Leave a Reply