லீஷா பெண்கள் பிரிவு, கடந்த எட்டு ஆண்டுகளாக, வளர் தமிழ் இயக்கத்தோடு இணைந்து, தமிழ் மொழி விழாவில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம். “பழங்களே மருந்து”, “கல்யாண சமையல் சாதம்”, மற்றும் “நிலாசோறு” என நாவுக்கு சுவை ஊட்டி சிறப்பான நிகழ்ச்சிகளை செய்த லீஷா பெண்கள் பிரிவு, இந்த வருடம், நம் செவிக்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் தமிழக நடிகர் சங்க தலைவர் என பண்முக கலைஞர் திரு நாசர் அவர்களை சிறப்பு பேச்சாளராக அழைத்தோடில்லாமல், சிங்கப்பூரில், இன்றைய இளையர்கள் அன்றாட வாழ்க்கையில் தன் தாய்மொழியான தமிழில் பேச ஊக்குவிக்கும் விதமாகவும், சுவரசியமாகவும் இந்நிகழ்சிசியை ஏற்பாடு செய்திருந்தினர்.
இந் நிகழ்ச்சி லீ குவான் யூ இரு மொழிக் கல்வி நிதி மற்றும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி, 2 பாகங்களாக நடைபெற்றது. முதல் பகுதியாக, லீஷா பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்த, உள்ளுர் வசந்தம் தொலைக்காட்சியின் பிரபலம், கலைஞரும், வழக்கறிஞருமான திரு வடி PVSS அவர்கள், தேக்காவில், பதின்மவயதினருடன் உரையாடும் விதமாக அமைந்தது. அதில், தமிழில் பேச ஏன் தயங்குகிறார்கள், வீட்டிலும், சுற்றத்தாரிடத்திலும், தமிழ் நண்பர்களிடமும் தாய்மொழியான தமிழில் பேசாமல் பிற மொழிகளில் பேசுகிறார்கள்? தமிழில் பேசுவதால் ஏற்படும் மகிழ்ச்சி, மற்றும் எவ்வாறு தமிழில் பேச ஏற்படும் தயக்கங்களை கலைவது என எதார்த்தமாகவும், நகைச்சுவையுடனும் பதின்ம வயதினருடன் அளவளாவினார் திரு வடி PVSS.
இரண்டாவது பாகமாக, 2 மணி நேர நிகழ்ச்சியாக மெய்நிகரியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் தலைப்பு “ அழகு தமிழ் – நாசருடன்”. நிகழ்ச்சியில் திரு நாசர், அவர்கள், தமிழ்மொழி அவருக்கு வாழ்க்கையில் எவ்வாறு உறுதுணையாக இருக்கிறது என்பதையும், வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தமிழ் பேசவேண்டியதன் அவசியத்தையும்,தமிழில் சரளமாக பேசி பழக ஆலோசனைகளை கூறிய திரு நாசர் அவர்கள், ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமல் தமிழில் ஒரு மணி நேரம் அழகு தமிழில் உரையாடினார். அதுமட்டுமில்லாமல், திரு வடி PVSS நெறியாளராக இருந்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினார்.
அரங்கம் நிறைந்த காட்சி என்று கூறுவதுப் போல், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே தமிழ் அமைப்பின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டதால் மெய்நிகரி நிறைந்தது. மெய்நிகரியில் இணையமுடியாமல் போனவர்கள் லீஷா பெண்கள் பிரிவின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிப்பரப்பை கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியாமல் போனவர்கள் LISHA Women’s Wing முகநாலுக்குச் சென்று இந்நிகழ்ச்சியை காணலாம்.
ஏற்பாட்டாளர்களுக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து நல்ல பாராட்டை, கருத்து படிவத்தின் மூலம் கிடைத்துள்ளது.
photo and article source: LISHA Women’s Wing