Sing-Ind Voice

Breaking News

Karaikudi Santhai photo one

 

திரு: சிவராமன் பழநியப்பன்

 

 

காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னை (KNSC)  கடந்த  29/12/2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள  எம்.எல்.எம் கல்யாண மண்டபத்தில்   நம் இனத்தில் வளர்ந்து வரும்  சிறு தொழில் மற்றும் கைவினை பொருட்கள் தயார் செய்து வியாபாரம் செய்து வரும் மகளிர் மற்றும்  தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவுத் திறமைகளை வெளிக்கொணர்ந்து  ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இணைப்பாலத்தை  “காரைக்குடி சந்தை” என்ற பெயரில் ஒரு நாள் திருவிழாவாக மிக நேர்த்தியாக  திட்டமிட்டு கடந்த மூன்று மாத காலமாக அயராது பாடுபட்டு உழைத்து தலைநகர் சென்னை மற்றும் உலகெங்கும்  உள்ள நகரத்தார்கள் மற்றும் அனைவரும் வியக்கும் வகையில்  மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளனர்.

நகரத்தார் மகளிர், தொழில் முனைவோர், வியாபாரம் செய்பவர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் வேவ்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து  இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்தி  தங்கள் பொருட்களை மற்றும் திறமைகளை இங்கு சந்தைப்படுத்தி  தாங்கள்  எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக வியாபாரம் செய்துள்ளனர் .

தொழில் நுட்ப துறையில் கணனி மூலம்  அறிவு சார்ந்த கல்வி பயிற்றுவிக்கும் ஸ்டால்களும், சூரிய ஒளிகற்றை மூலம் மின்சாரம் தயாரிக்கும்  ஸ்டால்களும் மற்றும் உடனுக்குடன் புகைப் படம் எடுத்துத்தரும் அதிநவீன போட்டோ  ஸ்டாலும் இச்சந்தையில் இடம் பெற்றிருந்தது காலத்திற்கேற்ற சிறப்பாகும். இந்தச் சந்தையில் செட்டிநாட்டு கொட்டன்,  கூடைகள், செட்டிநாட்டுக் காட்டன் மற்றும் டிசைன் புடவைகள், பித்தளை, எவர்சில்வர், மங்குச் சாமான்கள், கலைநயமிக்க மரச்சாமான்கள்,  பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள், குழந்தைகளுக்கான  வடிவமைக்கப்பட்ட  ரெடிமேட் ஆடைகள், பை வகைகள், வெள்ளிச் சாமான்கள், தங்கம், வைர ஆபரணங்கள், செட்டிநாட்டிற்கே உரித்தாகிய மாவு வகைகள், தேங்குழல், மாவுருண்டை, சீடை, அதிரசம்  போன்ற பலகாரங்கள் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு அமோக வியாபாரம் நடந்துள்ளது.

மேலும் இங்கு தனிப்பிரிவாக பாரம்பரியம் மிக்க செட்டிநாட்டு உணவு வகைகள்  வித விதமாக  உடனுக்குடன் சுடச் சுட பார்வையாளர்கள் வாங்கிச் சாப்பிட ஏதுவாக 8 ஸ்டால்கள் அமைக்கப்பட்டது எல்லோராலும் பாராட்டப்பட்டது. இதில் ஐஸ்கிரீம், ஜிஹர்த்தாண்ட,சர்பத், பாப்கார்ன் ஸ்டால்களும் இடம் பெற்றிருந்தது

 

குறிப்பிடத்தக்கது.மேலும் குழந்தைகளுக்கான உணவு வகைகள், சத்து மாவு மற்றும் பருப்பு தானிய வகைகளும் இடம்பெற்றிருந்தன. அன்று காலை  10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நம் நகரத்தார் நிறுவனம் ஒன்றின் பங்களிப்பாக  வந்திருந்த அனைவருக்கும் காபி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

எந்த வித விளம்பரமுமின்றி காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னை  (KNSC) நிர்வாகிகளும், கமிட்டி மெம்பர்களும், இந்த காரைக்குடி சந்தைக்கென உருவாக்கப்பட்ட குழுத் தலைவர்கள், தலைவிகள்  மற்றும் குழுக்களின் உறுப்பினர்களும் மூன்று மாத கால இடைவெளியில்  மொத்தம் 77  ஸ்டால்களுக்கு இடம் கொடுத்து லாப  நோக்கின்றி நம் சமூக மேம்பாட்டிற்காக சேவையாகச் செய்தது, நம் நகரத்தார் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய மிக முக்கிய நிகழ்வாகும்.

 

அன்று நம் நகரத்தார் குழந்தைகள் மற்றும் இளஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்காக பல  போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு மிகவும்  நேர்த்தியாக திட்டமிட்டு முன் கூட்டியே ஆன்லைன் மூலம்  நம் நகரத்தார் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பதிவு செய்ய வைத்து எந்தவித  குழப்பமுமின்றி போட்டிகளை நடத்திய விதம் மிகவும் அருமை. இந்த   போட்டிகளில் மொத்தம் 146 குழந்தைகள் மற்றும் இளஞர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கியதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்க்கப்பட்டன.

 

காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னை (KNSC) 2015ல்  தொடங்கப்பட்டாலும், ஆரம்பகாலம் முதலே அவர்கள் தங்களின் திறமைகளினாலும்,  சங்கத்தின் லோகோ மூலமாக ஒன்பது நகரக்கோவில் நகரத்தார்களிடையே என்று ஒற்றுமையை வலியுறுத்தி நிலைபெறச் செய்து நம் சமூகம் மென்மேலும்  தழைக்கப் பாடுபட்டுக் கொண்டிருப்பது இந்த “காரைக்குடி சந்தை” வாயிலாக மேலும் வலுப்பெற்றுள்ளது என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஸ்டால்கள் போட்டவர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் மீடியாக்களில் செய்தியாகவும் படமாகவும் வெளிவந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது.

 

நாமும் காரைக்குடி நகரத்தார் சங்கம் சென்னையின் (KNSC) சமூக சேவையையும், “காரைக்குடி சந்தை” கண்ட மகத்தான வரவேற்பையும், வெற்றியையும் மனமாரப் பாராட்டுவோமாக !!.

Leave a Reply